
ரஜினி - கமல் ரசிகர் சண்டையில் தலையிட்டு ரஜினியை மறைமுகமாக விமர்சித்த நடிகை வினோதினி
அப்படி ஒரு ரஜினி ரசிகர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றை விமர்சித்து கிண்டலாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். கமலின் ரசிகர்கள் சிலர் இதற்கு பதில் விமர்சனம் செய்திருந்தாலும் கமலின் கட்சியில் பொறுப்பு வகிப்பவரும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருபவருமான நடிகை வினோதினி, கமலுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து ரஜினிகாந்த் குறித்து மறைமுகமாக கடுமையான விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‛‛அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை. ஆதித்தநாத் காலில் விழுந்ததில்லை. இகழ்ந்து பேசாதோர் நம் தொண்டர். ஈஷா யோகம் கண்டதில்லை. உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராளி சாவுகள் நாட்டைச் சுடுகாடாக்கும், போராளிகள் தீவிரவாதிகளென சொல்லவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் தராமலிருந்ததில்லை. எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று பஞ்ச் பேசாமல் வந்துவிட்டோம். ஏழ்மை இந்தியாவில் பணமதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை. ஐந்நூறு கோடி வசூலிருந்தும் ஆறரை லட்ச சொத்து வரி செலுத்தாமலில்லை. ஒருநாளும் சரியான வருமானவரி கட்டாமலிருந்ததில்லை
So…
ஓரமாகப் போய் அழவும்,
அது உத்தமம்"" என ரஜினி பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் இப்போதும் ரஜினியும் கமலும் மிக நெருங்கிய நட்பை பேணி பாதுகாத்து வரும் நிலையில் அவரது ரசிகர்கள் தேவையில்லாமல் ஒரு நடிகரை இன்னொரு நடிகரின் ரசிகர்கள் தரம் தாழ்த்தி பேசி அவர்களுக்கு தரக்குறைவான விமர்சனங்களை தேடி தருவது அழகல்ல என்று இரண்டு நடிகர்களின் படங்களையும் ரசிக்கும் பொதுவான ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல கமல், ரஜினி ஆகியோர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதை இரு தரப்பு ரசிகர்களும் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.. அதுதான் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்கிற கருத்துக்களையும் சோசியல் மீடியாவில் அதிகமாக பார்க்க முடிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!