
நாளை ஆக. 28ல் வெளியாகும் ‛லப்பர் பந்து பட டிரைலர்
ஆக 27, 2024
Advertisement
கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் "நெஞ்சுக்கு நீதி" படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் "லப்பர் பந்து". பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் படம் திரைக்கு வரும் நிலையில் இதன் டிரைலர் நாளை ஆகஸ்ட் 28ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!