
கோட் படத்தின் கதையை சொன்ன வெங்கட் பிரபு
இந்த நிலையில் படத்தின் கதை பற்றி வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தின் உளவு அமைப்பான "ரா" வின் துணை அமைப்பு "சாட்ஸ்", அதாவது சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை. இந்த அமைப்பு ரா அமைப்போடு இணைந்து பணியாற்றும்.
இந்த அமைப்பில் பணியாற்றிய ஒரு குழு ஒரு காலத்தில் செய்த ஒரு விஷயம் தற்போது அவர்களுக்கு பிரச்னையாக வந்து நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. ஒரு பெஸ்டிவல் மூடில் படம் இருக்கும், வழக்கமான விஜய்யை வேறு மாதிரி ரசித்து பார்க்கிற மாதிரி இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!