
விக்ரமின் தங்கலான் படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா
அதன் பின் விக்ரம், சூர்யா இடையே சில தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. இருவரும் பேசிக் கொள்வதும் கிடையாது. இந்நிலையில் சூர்யாவின் உறவினரான கேஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் "தங்கலான்" படம் பற்றிய அறிவிப்பு வந்த போது திரையுலகினர் ஆச்சரியப்பட்டார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற "தங்கலான்" இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். நாளை வெளியாக உள்ள படத்திற்கு தற்போது சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினரை டேக் செய்து "தங்கலான்… இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்"" என்று குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!