
நவ., 1ல் லியோ வெற்றி விழா : போலீஸிடம் தயாரிப்பாளர் மனு
ஒருவாரத்தில் ரூ.461 கோடி வசூலித்து உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. ஆனால் வசூல் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்து சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இந்த படத்தின் வெற்றி விழாவை நவ., 1ல் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இதை நடத்த உள்ளனர். இதில் விஜய்யும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. அதனால் இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தயாரிப்பு தரப்பில் போலீஸில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
லியோ படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாய் நடத்த திட்டமிட்டனர். ஆனால் கடைசிநேரத்தில் ரத்தானது. அதனால் படத்தின் வெற்றி விழாவை இப்போது பிரமாண்டமாய் நடத்த திட்டமிட்டுள்ளனர்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!