மலேசியாவில் இந்திய படங்களின் வசூல் சாதனையை முறியடித்த ‛ஜெயிலர்
Advertisement
Advertisement
மலேசியாவில் இந்திய படங்களின் வசூல் சாதனையை முறியடித்த ‛ஜெயிலர்
செப் 15, 2023
அ நிறம் | அளவு
Advertisement
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த மாதம் பத்தாம் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் படம், 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மலேசியாவில் ஜெயிலர் படத்தை வெளியிட்டுள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மலேசியாவில் ஜெயிலர் படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூலையும் பின்னுக்கு தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஷாரூக்கானின் தில்வாலே என்ற படம்தான் மலேசியாவில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. தற்போது ஜெயிலர் படம் அதை முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படம் மலேசியாவில் மட்டும் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!