
நிலவில் சந்திரயான் 3 : ரஜினி, கமல் பெருமிதம்
இந்த சாதனை குறித்து ரஜினி தனது டுவிட்டரில் “அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயானை தரையிறக்கியதன் மூலம் நமது தேசம் அதன் பெருமையை அடையாளப்படுத்துகிறது. இஸ்ரோவுக்கு எனது இதயம் கனித்த வாழ்த்துகள். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “செயற்கைகோளின் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது தொடங்கி நிலவில் தரையிறங்கியது வரை என்ன ஒரு நெடும் பயணம். இஸ்ரோ குழு இந்தியாவையே பெருமைபடுத்தியுள்ளது. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். நிலவில் இந்தியர்கள் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என பதிவிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!