
புதுமுகங்களின் படத்திற்கு பாடல் எழுதிய தலைமை செயலாளர் இறையன்பு
படம் பற்றி அவர் கூறியதாவது: தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே "சைக்கலாஜிகல் லவ் த்ரில்லராக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் தலைமை செயலாளர் இறையன்பு இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். “எத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?!” என்ற பாடல், காதலர்களின் காலர் ட்யூனாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், இந்தப் பாடல் மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பியூட்டி என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!