
இயக்குனராகும் சிவகார்த்திகேயன்
டிச 15, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்து இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள அயலான் படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என உருவெடுத்த சிவகார்த்திகேயன் அடுத்து இயக்குனராக களமிறங்க உள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த படத்தில் நடிப்பதோடு அதை இயக்கவும் செய்ய உள்ளாராம் சிவகார்த்திகேயன். இந்த தகவலை நடராஜனே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛எனது வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அவரே இயக்கவும் உள்ளார்"" என்றார்.
Tags
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!