
மீண்டும் வருகிறார் பாஸ்
இந்த நிலையில் பாஸ்கரன் மீண்டும் நடிக்க வருகிறார். பிரபல தயாரிப்பாளர் சித்திரை செல்வன் மற்றும் ஜாக் புரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கும் "டிஃபெண்டர்". படத்தில் அவர் நடிக்கிறார். கமல்ஹாசனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த திரைப்படக் கல்லூரி மாணவர் ரவிதேவன் இயக்குகிறார்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!