
மகன் பெயரை படத்தின் டைட்டிலாக்கிய விஷ்ணு விஷால்!
செப் 03, 2022
Advertisement
எப்ஐஆர் படத்தை தொடர்ந்து தற்போது மோகன்தாஸ், கட்டா குஸ்தி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த நிலையில் பிரவீன் என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்திற்கு தனது மகன் ஆர்யனின் பெயரையே விஷ்ணு விஷால் டைட்டிலாக்கி உள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் ஆரியன் படத்தை தனது சொந்த நிறுவனமான விவி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார் விஷ்ணு விஷால். மேலும் இந்த படத்தில் சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.
|
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!