
விஜய் - அஜித்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் கைகோர்க்கும் பிரகாஷ்ராஜ்
விஜய்யுடன் கடைசியாக வில்லு படத்திலும் அஜித்துடன் பரமசிவன் படத்திலும் இணைந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது விஜய்யுடன் 11 வருடங்களுக்கு பிறகும் அஜித்துடன் 16 வருடங்களுக்கு பிறகும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கவுள்ளார் என்கிற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்க இருக்கிறாராம். இந்தப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இதற்கு முன் இயக்கிய தோழா (ஊபிரி) படத்திலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மூன்றாவது முறையாக அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி சேரும் படத்திலும் அஜித் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ரசிகர்கள் எப்போதுமே இந்த "கில்லி; கூட்டணியை மீண்டும் "ஆசை"யுடன் ரசிக்க காத்திருக்கிறார்கள் என தாரளமாக சொல்லலாம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!