
இளையராஜா பற்றி தவறான தகவல்களை பரப்பாதீர்கள்
இதுப்பற்றி இளையராஜா உடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் பயணித்து வரும் அவரின் நலம் விரும்பியான ஶ்ரீராமிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛ராஜா சார் திருவண்ணாமலையில் இருக்கிறார். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அவர் அங்கு செல்வது வழக்கம். இன்று இரவு சாமி கும்பிட்டு விட்டு நாளை(ஜன., 1) காலை மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார். மதியம் 2மணிக்கு சென்னை வருகிறார். இதுவே அவரது பயண திட்டம். அவரது உடல்நிலை பற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ராஜா சார் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!