
நாற்கரப்போர்-ல் உண்மை கதை
இயக்குர் ஸ்ரீவெற்றி கூறியதாவது: சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்னைகளை சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது.
குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி "கிராண்ட் மாஸ்டர்க் ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது இந்தப்படத்தின் கரு. முதல் படத்திலேயே விளையாட்டை மையப்படுத்தி கதையை உருவாக்கும் எண்ணம் எனது வாழ்க்கையில் சந்தித்த உண்மை சம்பவத்தின் மூலமாகவே தோன்றியது
நாம் இன்றும் கண்டுகொள்ளாத மனிதர்களிடமும் நம்மை போல அனைத்து ஆசைகளும் இருக்கிறது. அதை சொல்லும் படம் தான் "நாற்கரப்போர்". இது ஒரு சமூகத்தினருக்கான படம் அல்ல. ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது என்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!