
பையா குறித்து தமன்னா உற்சாகம்
படம் வெளியாகி 14 வருடங்கள் கழித்து இப்படத்தை ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள். இது குறித்து படக்குழுவினர் லிங்குசாமி, யுவன், கார்த்தி, தமன்னா ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். “14 வருடங்களுக்குப் பிறகும் "பையா" மீதான காதல் இன்னும் வலிமையாக இருப்பதைப் பார்க்க அதை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இத்தனை காலத்திற்குப் பிறகும் பாசத்தையும், அன்பையும் இப்படம் பெற்றுக் கொண்டிருப்பதை நான் மிகவும் நன்றாகவே உணர்கிறேன். "பையா" படத்தின் மேஜிக்கை நீங்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் அனுபவிப்பதற்காக காத்திருக்க முடியவில்லை. லிங்குசாமி, கார்த்தி, யுவன் மற்றும் அனைத்து குழுவினருக்கும் அற்புதமான நினைவுகளுடன் முற்றிலுமான நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார் தமன்னா.
இயக்குனர் லிங்குசாமியை சந்தித்து "பையா" படத்தின் பொன்னான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார் கார்த்தி. நாளை "பையா" படம் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!