
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள்
மே 29, 2026
Advertisement
தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள படம் பெத்தி. ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் நான்காம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. தற்போது பெத்தி படத்தின் மஸ்ஸா மஸ்ஸா என்ற பாடலை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த பாடலும் முந்தைய பாடல்களைப் போன்று சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பழைய பாடல்களை நினைவூட்டும் வகையில் ஒரு அழகான பாடலை கொடுத்து தங்களை மெய்மறக்க செய்திருப்பதாக ராம் சரணின் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். அதோடு, இந்த பெத்தி படத்தின் ஆல்பம் எங்களுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. அதிலும் இந்த மஸ்ஸா மஸ்ஸா பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படிப்பட்ட அற்புதமான பாடலை கொடுத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானை நாங்கள் பாராட்டி மகிழ்கிறோம் என்று ராம்சரணின் ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!