
என்டிஆர், நீல் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…
அவற்றை மறுத்து படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் எக்ஸ் தளத்தில், “படத்தின் தோற்றம் குறித்தோ அல்லது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறித்தோ பரவி வரும் வதந்திகளில் துளியளவும் உண்மையில்லை. வழக்கமான தயாரிப்பு இடைவேளையைத் தவிர படம் திட்டமிட்டபடியே தொடர்ந்து நடந்து வருகிறது. சரிபார்க்கப்படாத தகவல்களை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதிகாரப்பூர்வமான தகவல்கள் எப்போதும் எங்களிடமிருந்தே வெளியாகும்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
பிரசாந்த் நீல் கடைசியாக இயக்கிய "சலார்" படத்தின் முதல் பாகம் 2023ல் வெளிவந்தது. கேஜிஎப் சாயலில் வந்த அந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்பட்டது. அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்காமல் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க வந்துவிட்டார்.
ஆகஸ்ட் 2024ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மெதுவாக நடைபெற்று வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!