
போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்…
"இந்தியன் 2" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் "இந்தியன் 3" படத்திற்கு மாறியது. இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை. எப்போதும் வரும் என்றும் தெரியவில்லை.
இதனிடையே, திருமணமாகி குழந்தைக்குத் தாயான பின்னும் தன் உடலமைப்பை கச்சிதமாக வைத்துள்ளார் காஜல் அகர்வால். கடந்த வாரம் புடவையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள்தான் அதற்கு சாட்சி. காஜலா அது என பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்நிலையில் மாலத்தீவில் குடும்பத்துடன் ஓய்வுக்குச் சென்ற காஜல் அங்கு எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பிகினி அணிந்த புகைப்படங்களும் அதில் உண்டு. இப்போது கூட அவர் கதாநாயகியாக நடிக்கலாம். அதை புகைப்படங்கள் மூலம் சொல்வதற்காகத்தான் அவர் அப்படங்களை அவர் வெளியிட்டிருக்கலாம். அடுத்த இன்னிங்ஸுக்கு வாருங்கள் காஜல்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!