
ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி
இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி இவர்களின் இந்த ஜோடியான வருகை குறித்து விமர்சிக்கும் விதமாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகைகள் ராதிகா, குஷ்பு போன்றவர்கள் ஆர்த்திக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஆர்த்தியின் பதிவுக்கு பதிலடி தருவது போல தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கெனிஷா.
அதில் அவர் கூறும்போது, “ஒரு ஆண்மையுள்ள ஆண் ஒருபோதும் குழப்பமான உணர்ச்சி ஆற்றலால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியை உணரும் பெண்ணின் பக்கம் சாய்கிறது.. மென்மை என்பது ஒரு செயல்திறன் அல்ல, ஆனால் ஒரு அமைதியான சக்தி.. அவள் அவனது வலிமையுடன் போட்டியிடுவதில்லை, ஆனால் அதை சமநிலைப்படுத்துகிறாள்.. அந்த இயக்கத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்”. கூறியுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இரு தரப்பினர் இடையே வார்த்தை போர துவங்கியுள்ளது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!