
கதை நாயகர்கள் ஆன காக்கா முட்டை சிறுவர்கள்
படத்தை ராசா விக்ரம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: சென்னையை சுற்றி குட்டி மலைகள் போன்று குப்பை மேடுகள் இருக்கிறது. இந்த மேடுகள் பற்றியும், அதையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்பவர்கள் பற்றியும் பொது மக்களுக்கு தெரியாது. பெற்றோர்களால் கைவிடப்படும் சிறுவர்கள் இந்த குப்பை மேட்டை நம்பி வாழ்க்கிறார்கள். அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களை சில சமூக விரோத கும்பல்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த சிறுவர்கள் ஏதோ ஒரு வழியில் செத்து போகிறார்கள். அல்லது கிரிமினல்களாக மாறுகிறார்கள். இந்த பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!