
ஜெயிலர் 2 : சாதனை விலைக்கு ஓடிடி உரிமை
இதனிடையே, இந்தப் படத்தின் ஓடிடி உரிமை விற்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வேறு எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் நடக்காத ஓடிடி வியாபாரம் இந்தப் படத்திற்காக நடந்துள்ளதாகத் தகவல். சுமார் 160 கோடி ரூபாய்க்கு அந்த உரிமை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு முன்பும் தமிழ் சினிமாவில் சில படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக ஓடிடி உரிமை விற்கப்பட்டுள்ளன. "தக் லைப்" படம் 140 கோடி, "லியோ" 120 கோடி, "ஜனநாயகன்" 120 கோடி, "கூலி" 120 கோடி, "ஜெயிலர்" 100 கோடி என இதற்கு முன்பு ஓடிடி உரிமை விற்கப்பட்டதாகத் தகவல்.
"ஜெயிலர் 2" படம் தியேட்டர் வசூலிலும் புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கெனவே உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!