
ஜூன் 7ம் தேதி கேரளாவில் ரீ ரிலீஸ் ஆகும் கஜினி
இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கஜினி திரைப்படமும் வரும் ஜூன் ஏழாம் தேதி மலையாளத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இந்த படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே சமயம் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.. இந்த படம் ரிலீஸ் தேதியை கொண்டாட வேண்டும் என்றால் செப்டம்பர் மாதம் தான் கொண்டாட வேண்டும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கேரளாவில் இந்த படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜய்யின் கில்லி திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் வசூலித்ததை தொடர்ந்து கஜினியையும் அதே போன்று ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்று தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!