
கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்த அசோக் செல்வன்
அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். கீர்த்தி பாண்டியன், ‛தும்பா, அன்பிற்கினியாள்" உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில இவர்களின் திருமணம் இன்று (செப்.,13) திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் சேது அம்மாள் பண்ணையில் நடந்தது. அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என கூறப்படுகிறது. புதுமண தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!