
ஆனந்த் மகிந்திராவுக்கு ‛நாட்டு நாட்டு ஸ்டெப் கற்றுக்கொடுத்த ராம்சரண்
இது சம்பந்தமான வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‛ஐதராபாத் இ-பிரிக்ஸ் பந்தயம் தவிர்த்து எனக்கு கிடைத்த உண்மையான போனஸ் என்னவென்றால், நாட்டு நாட்டு பாடலுக்கான ஸ்டெப் எப்படி போடுவது? என்பது பற்றி நடிகர் ராம்சரணிடம் இருந்து கற்று கொண்டேன். நன்றி மற்றும் ஆஸ்கார் விருது பெறுவதற்கு வாழ்த்துகள் எனது இனிய நண்பரே!" என தெரிவித்து உள்ளார்.
இதற்கு ராம்சரண் பதிலுக்கு, ‛ஜி என்னை விட விரைவாக ஸ்டெப்களை நீங்கள் போட்டுள்ளீர்கள். உங்களுடன் உரையாடிய அந்த தருணம் மகிழ்ச்சியானது. ஆர்.ஆர்.ஆர். பட குழுவினருக்கு வழங்கிய உங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள்" என தெரிவித்து உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!