
பர்ஹானா ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ்
பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஒரு இஸ்லாமிய பெண்ணின் வாழ்வியலை சொல்லும் படமாக உருவாகி இருப்பதாகவும் பர்ஹானா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!