
நேசிப்பாயா-வை எதிர்பார்த்து காத்திருந்த அதிதி ஷங்கர்
விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசுகையில் “இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஷ்ணுவர்தனுக்காகதான் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். அவரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். "விருமன்" படத்தின் போது முழுக்கதையும் எனக்கு கொடுத்தார்கள். விஷ்ணு சார் எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். பின்பு, ஷூட் சென்று விட்டோம். ஆன் தி ஸ்பாட்டில்தான் எனக்கு வசனம், காட்சி சொல்வார் விஷ்ணு. நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!