
ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார்
ஸ்ரீதேவியைப் பற்றிய பயோகிராபி புத்தகம் ஒன்றை அவரது குடும்பத்திற்கு நெருக்கமான திரஜ்குமார் என்பவர் எழுதியிருக்கிறார். ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் ஆன திரஜ்குமார் அந்த புத்தகத்திற்கு “ஸ்ரீதேவி - த லைப் ஆப் எ லெஜன்ட்" எனப் பெயரிடப்பட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ஸ்ரீதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை முதற்கொண்டு வெளிப்படையாக எழுதியுள்ளாராம். அவரைப் பற்றிய முழுமையான ஒரு புத்தகமாக இருக்கும் என்று புத்தகத்தை வெளியிட்டுள்ள பதிப்பகத்தார் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் ஸ்ரீதேவி வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்த போது அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த சில ஹீரோக்கள் அவரைக் காதலித்ததாகவும் கூட கிசுகிசு உண்டு. ஹிந்திக்குச் சென்ற பிறகும் அங்குள்ள சில ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், தயாரிப்பாளரான, ஏற்கெனவே திருணமான போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. அவரது இரண்டு மகள்களில் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். போனி கபூர் பற்றி நமது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அஜித்தின் கடைசி மூன்று படங்களைத் தயாரித்தவர் அவர்தான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!