Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் மிகப்பெரிய சக்தி ஆழ் மனது: பேராசிரியர் பேச்சு

உலகின் மிகப்பெரிய சக்தி ஆழ் மனது: பேராசிரியர் பேச்சு

உலகின் மிகப்பெரிய சக்தி ஆழ் மனது: பேராசிரியர் பேச்சு

உலகின் மிகப்பெரிய சக்தி ஆழ் மனது: பேராசிரியர் பேச்சு

UPDATED : ஜூலை 08, 2024 12:00 AMADDED : ஜூலை 08, 2024 09:08 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம் :
ஆழ் மனது தான் உலகத்தின் மிகப்பெரிய சக்தியாகும். அதனால் தனது லட்சியத்தை அடைய, தினமும் காலை மாலையில், ஆழ் மனதுடன் பேச வேண்டும் என கோவை அரசு கலைக்கல்லூரி அரசியல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கனகராஜ் பேசினார்.

மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாரிமுத்து தலைமை வகித்தார். கணிதத்துறை பேராசிரியை பபிதா வரவேற்றார்.

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி அரசியல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கனகராஜ், முதலாம் ஆண்டு வகுப்பை துவக்கி வைத்து பேசியதாவது:

மாணவர்களின் பருவம் கூண்டு பறவை, கூட்டுக்குள் பறவை என, இரண்டு பருவமாகும். பள்ளிப் பருவம் கூண்டு பறவையாகும். கல்லூரி பருவம் கூட்டுக்குள் பறவையாகும். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய, தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன்பும், காலையில் தூங்கி எழுந்தவுடன், சிறிது நேரம் தியானம் செய்து, உங்கள் ஆழ்மனதுடன் லட்சியம் குறித்து பேச வேண்டும்.

உலகத்தின் மிகப்பெரிய சக்தி ஆழ்மனது தான். தினமும் ஆழ்மனத்துடன் பேசி வந்தால், லட்சியத்தை அடைய முடியும். ஆங்கிலத்தில் பேச நாம் பயப்படுகிறோம். தவறாக இருந்தாலும் வாய்விட்டு பேசினால் தான், ஆங்கிலத்தில் நன்கு பேச முடியும். தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொருவரும் ஐந்து மொழிகளில் கட்டாயம் பேச வேண்டும். ஒன்று தாய்மொழி, இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது கம்ப்யூட்டர், நான்காவது ஆழ் மனது, ஐந்தாவது உடல் சொல்வதை கேட்பது, ஆகிய ஐந்து மொழிகளில் பேச வேண்டும்.

வேலை செய்வதை விட, பிறருக்கு வேலை கொடுப்பவர்களாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசியல் வாதியாகவும் வர வேண்டும். தோல்வியை கண்டு அச்சம் அடையக் கூடாது. எந்த பிரச்னை என்றாலும், சிறிது நேரம் அப்பிரச்னை குறித்து உங்களுக்குள் பேசிக்கொண்டால், அதற்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு பேராசிரியர் கனகராஜ் பேசினார்.

வணிகவியல் துறை பேராசிரியர் பாண்டியராஜன் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். பொருளியல் துறை பேராசிரியை தையல்நாயகி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us