ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கிடைக்க பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:18 AM

நாமக்கல் :
ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கிடைக்க தாமதம் ஆவதால், மாணவ, மாணவியர் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், கடந்த, 6ல் பிளஸ் 2 தேர்வு முடிவும், 10ல், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகின. இதையடுத்து, மாணவ, மாணவியர், ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங், மருத்துவம், கலை அறிவியல், பாரா மெடிக்கல் போன்றவற்றில் சேர விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு, பள்ளி, கல்லுாரி சேர்க்கையின் போது, பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
சலுகைகளின் கீழ் விண்ணப்பம் செய்ய, ஜாதி, வருமானம், முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட சான்றுகளை பெற வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.இதற்காக, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனிலும், நேரடியாகவும் பலர் விண்ணப்பம் செய்கின்றனர். ஆன்லைன் மூலமோ, நேரடியாகவோ விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பத்தை, வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவை விண்ணப்பதாரரை சென்றடையும். இந்த நடைமுறையை கடைப்பிடிப்பதில், நாமக்கல் தாலுகாவில் காலதாமதம் ஆவதால், மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவியர், பெற்றோர் தவித்து வருகின்றனர்.
எனவே, சான்றிதழ்கள் விரைவாக கிடைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, நாமக்கல் தாசில்தார் சீனிவாசனிடம் கேட்டபோது, அப்படி எல்லாம் இல்லை. சீக்கிரம் முடித்து விடுகிறோம். பென்டிங் எதுவும் இல்லை. அப்போதைக்கு அப்போதே முடித்து விடுகிறோம் என்றார்.