செய்தி துறையில் காலியிடங்கள் நிரப்புமா அரசு?

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 05:37 PM

சென்னை :
காலியாக உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு, செய்தி துறையில் எழுந்துள்ளது.
அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில், பல்வேறு மாவட்டங்களில், 40க்கும் மேற்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அத்துடன், தமிழக அரசு திரைப்பட பிரிவு, தமிழக அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில், 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. செய்தித்துறையில் முக்கியமான கூடுதல் இயக்குனர் பணியிடமும் காலியாக உள்ளது.
காலியாகவுள்ள இந்த பணியிடங்களை பதவி உயர்வு வாரியாக நிரப்ப வேண்டும். ஆனால், பதவி உயர்வும் தாமதமாகி வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் குறித்த விபரங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
காலி பணியிடங்களை நிரப்ப, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்து உள்ளது.