மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இந்த முறை சாதிக்குமா?

UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 09:29 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு 106 பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றன. தேர்வுக்கான முடிவுகள் வெளியானபோது, பல அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் படுமோசமாக இருந்தது.
அதில், காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை பார்த்து, கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்தாண்டு, 133 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், வெறும் 42 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள, 91 மாணவர்களும் தோல்வியடைந்ததால், தேர்ச்சி சதவீதம் 31.5 சதவீதமாக குறைந்தது.
இவ்வளவு குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசு பள்ளி என்பதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மாவட்டத்திலேயே குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளியாகவும் இருந்தது. இதையடுத்து, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, பள்ளி ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என, கல்வித்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெளியாகிறது. மேலும், கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் பலரின் கவனமும், சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மீது விழுந்துள்ளது. தற்போது எத்தனை சதவீத தேர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.