துணை மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்காதது ஏன்? முதல்வருக்கு டாக்டர்கள் கேள்வி

UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:45 AM

சென்னை:
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்பு இடங்களை, தனியாருக்கு நிகராக ஏன் அதிகரிக்கவில்லை என, முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை என தலா ஒரு மருந்தியல் கல்லுாரி; ஆறு செவிலியர் கல்லுாரிகள் உட்பட, துணை மருத்துவ படிப்புகளுக்கு, 14 கல்லுாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. இவற்றில், 608 இடங்கள் உள்ளன. அதேநேரம், 391 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 21,190 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.
தனியார் கல்லுாரிகளில் துணை மருத்துவம் படிக்க, 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதனால், ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில், தனியாருக்கு நிகராக, அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஏன் துணை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவில்லை என கேள்வி எழுப்பி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
டாக்டர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதம்:
துணை மருத்துவ படிப்புகளான பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கல்லுாரிகளை தனியார்களே நடத்துகின்றனர். துணை மருத்துவ படிப்புகளில் மொத்தமுள்ள இடங்களில், 97 சதவீதம் தனியாரிடம் உள்ளது. தனியார் கல்லுாரிகள் அதிகளவில் துவங்க அனுமதித்த நிலையில், அரசு சார்பில் கல்லுாரிகள் துவக்கவோ, இடங்களை அதிகரிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் கல்லுாரிகளில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த, 60 ஆண்டுகளாக ஒரு துணை மருத்துவ படிப்பு கூட புதிதாக துவக்கப்படாமல் உள்ளது. ஏழை மாணவர்கள் நலன் கருதி, துணை மருத்துவ படிப்புகளை, அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் துவங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.