கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பாரபட்சம் ஏன்?

UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 09:54 AM
கோவை:
கட்டாய கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளில் பாரபட்சம் காட்டுவதால், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வாய்ப்பை இழப்பதாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு, ஆதிதிராவிடர் நலக்குழு மாநில முன்னாள் உறுப்பினர் செல்வகுமார் புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து, செல்வகுமார் கூறியதாவது:
குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் கட்டாய உரிமைச் சட்டம் 2009ன் படி, அனைத்து தனியார், சுயநிதி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, நுழைவு வகுப்பில் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில், 25 சதவீதம் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக, ஆதரவற்ற விதவை, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எவ்விதமான விதிமுறைகளும் கடைப்பிடிக்காமல், சேர்க்கை நடத்த வேண்டும் என்பது விதிமுறையாகும்.
ஆனால், பல பள்ளிகளில் சிறப்பு பிரிவினருக்கு, சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு, போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகள், இந்த கட்டாய கல்வி சட்டத்தின் மூலம் சரிசமமாக பயில வேண்டும் என்பதற்காக, கொண்டு வரப்பட்டது இந்த சட்டம்.
ஆனால், பெயரளவுக்கு மட்டுமே, இந்த தேர்வு நடக்கிறது. அதேபோல, சிறப்பு பிரிவில் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, நேரிடையாக சேர்க்கை நடத்துவது கிடையாது. மாணவர் சேர்க்கையில் குறைகளை போக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.