UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 08:51 AM
பல்லடம்:
பல்லடம் நகராட்சி, அண்ணா நகரில், அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை அருகருகே செயல்படுகின்றன. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இட பற்றாக்குறை காரணமாக உயர்நிலை பள்ளி மாணவ மாணவியர் அவதிப்பட்டு வரும் நிலையில், இரண்டு ஆண்டுக்கு முன், பள்ளிக்கு புதிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:
உயர்நிலைப் பள்ளியில் உள்ள இரண்டு வகுப்பறையில், 200க்கும் அதிகமான மாணவ மாணவியர் படிக்கின்றனர். இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கடந்த, 2022ல் மாணிக்காபுரம் ஊராட்சிக்கு சொந்தமான, 30 சென்ட் இடம் புதிய பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்றுவரை பள்ளி கட்டட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.