கோடையை குஷியாக்க களைகட்டும் பயிற்சிகள்
கோடையை குஷியாக்க களைகட்டும் பயிற்சிகள்
கோடையை குஷியாக்க களைகட்டும் பயிற்சிகள்
UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:53 AM

திருப்பூர்:
தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கி, இரண்டு நாட்களாகி விட்டது. அப்பாடா... இனி ஒரு மாதம் ஜாலி என துள்ளிக்குதிக்கும் குட்டீஸ் முதல் மாணவ, மாணவியர் வரை அனைவருக்கும், தேவையான பயிற்சி முகாம்களுக்கு விளையாட்டு சங்கங்கள் தயாராகி வருகின்றன.
ஒரு வாரம் துவங்கி ஒரு மாதம் வரை சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்க ஒவ்வொரு விளையாட்டுக்கான பயிற்சிகளும் கட்டணம் பெற்று நடத்தப்படுகின்றன. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 200 ரூபாய் கட்டணத்தில், உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி, வரும், 29ம் தேதி முதல் துவங்குகிறது.
பள்ளி முடிந்து இரண்டு நாள், பயிற்சி தற்போது தான் துவங்கியுள்ளது என்பதால், பெற்றோர் பலரும் அதற்கான தேடல்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கோடை விடுமுறை என்றாலே கம்ப்யூட்டர் சென்டர்களில் புதிய படிப்புகளில் இணைவது, 15 நாள், ஒரு மாதம் சான்றிதழ் படிப்புகளில் இணைவதில் பெற்றோர், மாணவருக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். ஏப்., மாதம் முடிய உள்ள நிலையில், தற்போதைக்கு பலரும் விண்ணப்பித்து, இணைந்துள்ளனர். மே முதல் வாரம் வகுப்புகளில் பயிற்சியில் சேர்கின்றனர்.
திருப்பூரை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் சிவகுமார் கூறுகையில், வெயிலுக்கு ஜாலியாக தண்ணீரில் விளையாட பெற்றோர், குழந்தைகள் வருகின்றனர். ஆனால், பயிற்சி முகாமில் இணைந்து நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்ள சிலரே ஆர்வம் காட்டுகின்றனர். இளம் வயதிலே கற்றுக்கொண்டால் காலத்துக்கும் பயன் என்ற எண்ணம் உடனடியாக தோன்றுவதில்லை. அதேசமயம் பெற்றோர் சிலர், தங்கள் குழந்தைகளை ஆர்வமாக அழைத்தும் வருகின்றனர் என்றார்.