Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ எட்டாவது ஊதிய குழுவை அமைக்காமல் விட மாட்டோம்; ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் சபதம்

எட்டாவது ஊதிய குழுவை அமைக்காமல் விட மாட்டோம்; ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் சபதம்

எட்டாவது ஊதிய குழுவை அமைக்காமல் விட மாட்டோம்; ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் சபதம்

எட்டாவது ஊதிய குழுவை அமைக்காமல் விட மாட்டோம்; ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் சபதம்

UPDATED : ஜன 21, 2025 12:00 AMADDED : ஜன 21, 2025 09:14 AM


Google News
திருக்கோவிலூர் :
பழைய பென்ஷன் திட்டத்தை அரசு நிறைவேற்றும் வரை ஓய மாட்டோம் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் கூறினார்.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா திருக்கோவிலூரில் நடந்தது. வட்டார தலைவர் ரவி தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் ஜெயராணி முன்னிலை வகித்தார். செயலாளர் சதீஷ் வரவேற்றார்.

மாநிலத் தலைவர் லட்சுமிபதி பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

திருக்கோவிலூர் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன கடன் நாணய சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய ஆசிரியர் செல்லபாண்டியன், ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் சுகந்தி, கனவு ஆசிரியர் விருது பெற்ற சகாய ஸ்டேபி ஆகியோருக்கு மாநில பொதுச் செயலாளர் தாஸ் நினைவு பரிசு வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சமூகப் பார்வை இந்த சங்கத்துக்கு மட்டும் தான் உண்டு. காரணம், மாணவர்களின் நலன், சமூக நலனுடன் இயங்குகிறது.

பழைய பென்ஷன் திட்டத்தை பெற்றுத்தரும் வரை நாங்கள் ஓய மாட்டோம். கொள்கை பிடிப்போடு பயணிப்போம். பஞ்சாயத்து யூனியன் ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக மாற்றியது எம்.ஜி.ஆர்., இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை கொடுத்து ஊதிய குழுவை அமைத்தவர் கருணாநிதி.

இப்பொழுதும் எட்டாவது ஊதிய குழுவை அமைக்காமல் விட மாட்டோம். அதுவரை நாம் ஓய மாட்டோம் என்றார். விழாவில் தொழிலதிபர்கள் கார்த்திகேயன், முரளி நகராட்சி சேர்மன் முருகன், அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி பங்கேற்றனர்.

மாவட்டச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் நடராஜன், கல்வி மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் செல்லபாண்டியன் பாராட்டுரையாற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us