UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 07:09 PM

வாஷிங்டன்:
நிலவில் வாகனத்தில் பயணிப்பதற்காக மூன்று நிறுவனங்களை நாசா தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆர்டிம்ஸ் மிஷன் திட்டத்தின் கீழ் நிலவில் இயங்கும் வாகனத்தை வடிவமைக்கும் பணியை செயல்படுத்தி வருகிறது. இந்த வாகனத்தை வடிவமைக்கும் பணி இன்டியூடிவ் மெஷின்ஸ், லுனார் அவுட்போஸ்ட் மற்றும் வென்டுரி ஆஸ்ட்ரோலேப் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தை வடிவமைப்பதற்காக 4.6 பில்லியன் அமெரிக்க டாலரை நாசா ஒதுக்கியுள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டிருப்பதாவது:
இந்த வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களான தானியங்கி ஓட்டுநர் வசதி, வழிகாட்டி வசதிகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டியிருக்கும்.நிலவின் கடினமான சூழலை தாங்கும் திறன் கொண்டதாக இந்த வாகனம் இருக்கும். ஒரு ஆண்டு ஆய்வுக்கு பின் நிலவுக்கு அனுப்பப்படும். இந்த வாகனங்கள் நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு செய்ய உதவும். இதில் தானியங்கி டிரைவர் வசதி, ஆற்றல் மேலாண்மை, வழிகாட்டி மற்றும் தொடர்பு வசதிகள் இணைக்கப்பட உள்ளன. இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.