நீட் தேர்வில் சென்டம்: விழுப்புரம் மாணவர் சாதனை

UPDATED : ஜூன் 06, 2024 12:00 AM
ADDED : ஜூன் 06, 2024 03:42 PM
விழுப்புரம்:
அகில இந்திய அளவில் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இந்தாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து சாதித்தனர். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் ரஜனீஷ் 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
விழுப்புரம் வழுதரெட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரபாகரன், விமலாதேவி தம்பதியின் மகன் ரஜனீஷ். பிரபாகரன், திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர். தாயார் விமலாதேவி விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு கலை கல்லுாரி கணிதத் துறை தலைவர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் ரஜனீஷ்.
நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து, அங்கேயே நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.
மாணவர் ரஜனீஷ் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண் எடுத்தேன். நீட் தேர்வில் 720 மதிப்பெண் பெற்றுள்ளது மகிழ்ச்சி. பெற்றோரின் ஊக்கமும், ஆசிரியர்களின் தொடர் பயிற்சியும் சாதனைக்கு காரணம். சிறு வயது முதலே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்காக கடுமையான பயிற்சி எடுத்ததால் சாதிக்க முடிந்தது.
அகில இந்திய அளவில் முதலிடத்தில் வந்தது மகிழ்ச்சி. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படிக்கவும், கார்டியாலஜி மருத்துவம் படிப்பது எனது விருப்பமாகும். நீட் தேர்வுக்கு படிப்பது எளிதாகவே இருந்தது. தினசரி சொல்லித் தரும் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். தினசரி படிப்பும், அதற்கான டெஸ்ட்டும் எழுதி பார்த்தால் போதுமானது. முழு ஈடுபாட்டுடன் படித்தால் நீட் தேர்வில் எளிதாக வெல்ல முடியும் என்றார்.