Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்லா மாணவர்கள் இல்லாத கிராமங்கள்; மலை மாவட்டத்தில் உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்

பள்ளி செல்லா மாணவர்கள் இல்லாத கிராமங்கள்; மலை மாவட்டத்தில் உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்

பள்ளி செல்லா மாணவர்கள் இல்லாத கிராமங்கள்; மலை மாவட்டத்தில் உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்

பள்ளி செல்லா மாணவர்கள் இல்லாத கிராமங்கள்; மலை மாவட்டத்தில் உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்

UPDATED : செப் 25, 2024 12:00 AMADDED : செப் 25, 2024 08:47 AM


Google News
Latest Tamil News
பந்தலுார்:
கிராமங்களில் அனைத்து மாணவர்களும் முழு கல்வி அறிவு பெற்றவர்களாக மாறுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பந்தலுார் அருகே, மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தனியார் அமைப்பு மூலம் புனரமைக்கப்பட்டு கல்வித்துறையிடம், ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாபு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக வந்த மாவட்ட கலெக்டரை, பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்கள், திறந்து வைத்து, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், சிதிலமடைந்து காணப்பட்ட அரசு பள்ளி, தனியார் அமைப்பு மூலம் மிகச் சிறப்பாக புனரமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்ட வேண்டும். பள்ளி செல்லும் மாணவர்கள் கல்லுாரி படிப்பு தொடர்வதற்காக, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வி படிக்க முடியாவிட்டாலும், தொழிற் கல்விகளும் பயிற்றுவித்து, சுய தொழில் செய்வதற்கு உரிய ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சியும் தங்கள் கிராமப் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிட முன்வர வேண்டும்.

அதேபோல், இளம் வயது திருமணங்களையும் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என்றார். கூடுதல் கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார், தனியார் அமைப்பின் ஆலோசகர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியர் ஜெலீனா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us