தொழிற்சாலைக்கு வெள்ளி பயன்பாடு; உச்சத்தை நோக்கி செல்கிறது விலை

UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 02:32 PM
சென்னை:
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில், வெள்ளி உலோகத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், எப்போதும் இல்லாத வகையில், கிராம் வெள்ளி விலை, 101 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையும் சவரன், 55,000 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.
தங்கத்தை விட வெள்ளி விலை குறைவாக இருந்தாலும் மதிப்புமிகு உலோகமாக உள்ளது. இதனால் பலர், வெள்ளியில் செய்யப்பட்ட செயின், கம்மல், கொலுசு, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
வசதியானவர்கள், வெள்ளியால் செய்யப்பட்ட பூஜை சாமான்கள், தட்டு, டம்ளர் மற்றும் கலை பொருட்கள் என, பயன்படுத்துகின்றனர்.
தங்கத்திற்கு இணையாக, வெள்ளியும் விற்பனையாகிறது. தற்போது, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்பு, செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டை உள்ளடக்கிய விண்வெளி உள்ளிட்ட தொழில் துறைகளில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மொத்த வெள்ளி உற்பத்தியில், 20 சதவீதம் ஆபரணங்கள் மற்றும் பாத்திரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மீதி, 80 சதவீதம் தொழில்துறை தேவைகளுக்கு பயன்படுகிறது. இதனால், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கிராம் வெள்ளி விலை எப்போதும் இல்லாத வகையில், 101 ரூபாயாக உயர்ந்தது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் மட்டும் தான், வெள்ளி ஆபரணம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில், வெள்ளியில் முதலீடு செய்யப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களால், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், விமானம் உள்ளிட்ட வான்வெளி மற்றும் விண்வெளி தொழில் துறைகளில் வெள்ளி பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதனால், வெள்ளி விலை உயர்ந்து, தமிழகத்தில் முதல் முறையாக மூன்று இலக்கமான, 101 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, வரும் நாட்களில் மேலும் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராம் விலை, 6,850 ரூபாய்க்கும், சவரன், 54,800 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று இதன் விலை, கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 6,900 ரூபாயாகவும், சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 55,200 ரூபாயாகவும் விற்பனையானது.
பிரேக்கர், ஐசோலேட்டர், சுவிட்சஸ் உள்ளிட்ட எலக்ட்ரிகல்ஸ் சாதனங்களில் உள்ள, காப்பர் மேல், வெள்ளி முலாம் பூசப்படுகிறது. இதனால், காப்பர் மீது, பாசி படர்வது தடுக்கப்படுவதால் பழுதாகாது. வெறும் காப்பர் மட்டும் இருந்தால் பழுதாகி விடும். வெள்ளி விலை உயர்வால், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது என மூத்த தொழில் முனைவர் சண்முகவேலாயுதன் கூறினார்.