Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கோர்ட் உத்தரவிட்டும் வேலை கிடைக்கல! விளையாட்டு ஒதுக்கீடு கேட்கும் ஊழியர்

கோர்ட் உத்தரவிட்டும் வேலை கிடைக்கல! விளையாட்டு ஒதுக்கீடு கேட்கும் ஊழியர்

கோர்ட் உத்தரவிட்டும் வேலை கிடைக்கல! விளையாட்டு ஒதுக்கீடு கேட்கும் ஊழியர்

கோர்ட் உத்தரவிட்டும் வேலை கிடைக்கல! விளையாட்டு ஒதுக்கீடு கேட்கும் ஊழியர்

UPDATED : டிச 21, 2024 12:00 AMADDED : டிச 21, 2024 10:31 AM


Google News
வால்பாறை:
கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் வகையில்,வனத்துறையில் பணி வழங்க வேண்டும், என, விளையாட்டு வீராங்கணை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வால்பாறை அடுத்துள்ள சின்கோனா டான்டீ தேயிலை தோட்டம், லாசன் டிவிஷனில், கணேசன், அவரது மனைவி ஜானகி ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர், வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த, 24 ஆண்டுகளாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வரும் ஜானகி, வனத்துறையில் வனக்காவலர் அல்லது அலுவலக உதவியாளர் பணி வழங்க வேண்டும் என போராடி வருகிறார்.

இவருக்கு விளையாட்டு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணி வழங்கலாம், என, சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இது வரை பணி வழங்காமல், வனத்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

ஜானகி கூறியதாவது:


வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டான்டீ தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த, 24 ஆண்டுகளாக வனத்துறை சார்பில் நடைபெறும், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளேன்.

எனக்கு வனத்துறையில், வனக்காவலர் அல்லது அலுவலக உதவியாளர் பணி வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை மனு கொடுத்தும் நியாயம் கிடைக்கவில்லை. கோர்ட் உத்தரவிட்டும் பணி வழங்காமல் வனத்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்கின்றனர்.

இவ்வாறு, கூறினர்.

அதிகாரிகள் நழுவல்


ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜாவிடம் கேட்ட போது, சின்கோனா டான்டீ வனத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. விளையாட்டு வீராங்கணைக்கு பணி வழங்குவது குறித்து டான்டீ நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

வால்பாறை சின்கோனா டான்டீ கோட்ட மேலாளர் வடிவேலிடம் கேட்டபோது, விளையாட்டு ஒதுக்கீட்டில் பணி வழங்க வேண்டி, ஜானகி கொடுத்த மனுவுக்கு டான்டீ நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. டான்டீ நிர்வாகத்தில் அவருக்கு பணி வழங்க இயலாது. இது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகளிடம் தான் அவர் பணி வழங்க வேண்டுமென கேட்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us