நீட் தேர்வில் இரு விதமான முறைகேடு; ஒப்புக்கொள்கிறார் மத்திய அமைச்சர்

UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 10:40 AM

புவனேஸ்வர்:
இளநிலை மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வில் இரண்டு விதமான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், என்.டி.ஏ., அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
சர்ச்சை
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடந்தது. முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாயின. தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியதாவது:
தேர்வு எழுத நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறுதேர்வு
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தவை ஏற்று, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பினால் மறுதேர்வு எழுதலாம்.
நீட் தேர்வில் இரண்டு விதமான முறைகேடுகள் கண்டறியப்பட்டுஉள்ளன. மேலும் இரு இடங்களில் கூடுதலாக சில தவறுகள் நடந்துள்ளன. இந்த விவகாரத்தை அரசு மிக தீவிரமாக கையாண்டு வருகிறது என மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உறுதி அளிக்கிறேன். விரைவில் தீர்வு எட்டப்படும்.
என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. என்.டி.ஏ., தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்தாலும் அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இதை அரசு கவனத்தில் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.