Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ டி.வி.ஆர்., நினைவு சொற்பொழிவு

டி.வி.ஆர்., நினைவு சொற்பொழிவு

டி.வி.ஆர்., நினைவு சொற்பொழிவு

டி.வி.ஆர்., நினைவு சொற்பொழிவு

UPDATED : அக் 21, 2024 12:00 AMADDED : அக் 21, 2024 08:20 AM


Google News
நாகர்கோவில்: தினமலர் நிறுவனர் டி. வி. ராமசுப்பையர் 14 ஆவது ஆண்டு நினைவு சொற்பொழிவு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது.

கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஹென்றி ராஜா தலைமை வகித்தார். வரலாற்று துறை துணை பேராசிரியை என். அமுத குமாரி வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்கர், கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டேனியல் அறிமுக உரையாற்றினர்.

நீதிக்கட்சியின் சமூக நீதி' என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் ஹரூர் அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் வெங்கடேசன் பேசினார். கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோயல் நன்றி கூறினார்.

இதையொட்டி நடைபெற்ற ஆய்வு கட்டுரை போட்டியில் ஆராய்ச்சி மாணவர்கள் டெனிஷியஸ் ஆக்சலின் முதல் பரிசையும், ராஜேஷ் இரண்டாவது பரிசையும், லட்சுமிபுரம் கல்லூரி முதுகலை முதலாம் ஆண்டு மாணவி உன்னி மாயா மூன்றாம் பரிசையும் வென்றனர். இவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் மோகன் தாஸ் ஒருங்கிணைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us