பண்ணை பள்ளி வகுப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 08:03 AM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் கிராமத்தில், பயறு வகை பயிர்களில் பண்ணை பள்ளி வகுப்பு நடந்தது. இப்பண்ணை பள்ளி வகுப்பில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதில், வேளாண் அலுவலர் கோமதி, வேளாண் துறை மானிய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சுரேஷ், கொண்டக்கடலை பயிரில் பூச்சி நோய் மேலாண்மை, வேர்வாடல் நோய்க்கு ட்ரைகோ டெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் விதை நேர்த்தி, ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் அல்லது அடி உரமாக இடுவதற்கு ஏக்கருக்கு, 2.5 கிலோ இடுவதன் வாயிலாக வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் அலுவலர் மாரியப்பன், பயிர்களில் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் தினகரன், மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.