Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பி.யு.சி., தேர்வு முடிவில், டாப் 3 மாணவர்கள்

பி.யு.சி., தேர்வு முடிவில், டாப் 3 மாணவர்கள்

பி.யு.சி., தேர்வு முடிவில், டாப் 3 மாணவர்கள்

பி.யு.சி., தேர்வு முடிவில், டாப் 3 மாணவர்கள்

UPDATED : ஏப் 11, 2024 12:00 AMADDED : ஏப் 11, 2024 05:33 PM


Google News
பெங்களூரு:
கர்நாடகாவில், பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


கலைப்பிரிவு
பெங்களூரு ஜெயநகர் என்.எம்.கே.ஆர்.வி., பி.யு., கல்லுாரி மாணவி மேதா; விஜயபுரா எஸ்.எஸ்.பி.யு., கல்லுாரி மாணவர் வேதாந்த்; பல்லாரி இந்து தன்னாட்சி பி.யு., கல்லுாரி மாணவி கவிதா ஆகிய மூன்று பேர், 600 க்கு 596 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தையும்;

தார்வாட் கே.இ.பி., கம்போசிட் பி.யு., கல்லுாரி மாணவி ரவீணா சோமப்பா லமானி 595 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும்; தட்சிண கன்னடா புத்துார் விவேகானந்தா பி.யு., கல்லுாரி மாணவி புரோஹித் குஷிபென் ராஜேந்திரகுமார், பல்லாரி ஹுவினஹடகலி எஸ்.எம்.எம்., பாட்டீல் கம்போசிட் பி.யு., கல்லுாரி மாணவி அனுஸ்ரீ, பல்லாரி இந்து தன்னாட்சி பி.யு., கல்லுாரி மாணவர் சசிதரா ஆகிய மூன்று பேரும் 594 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
வணிக பிரிவு

துமகூரு வித்யாநிதி தன்னாட்சி பி.யு., கல்லுாரி மாணவி ஞானவி, 600 க்கு 597 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதல் இடத்தையும்; ஷிவமொகா குமுதாவதி காம்போசிட் பி.யு., கல்லுாரி மாணவர் பவன், உடுப்பி பூர்ண பிரக்ஞா பி.யு., கல்லுாரி மாணவர் ஹர்ஷித், மங்களூரு கனரா பி.யு., கல்லுாரி மாணவி துளசி, மல்லேஸ்வரம் எம்.இ.எஸ்., பி.யு., கல்லுாரி மாணவி தேஜஸ்வினி களே ஆகிய நான்கு பேர், 596 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும்; 16 பேர் 595 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அறிவியல் பிரிவு

ஹுப்பள்ளி வித்யாநிகேதன் பி.யு., கல்லுாரி மாணவி வித்யாலட்சுமி 600 க்கு 598 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தையும்; மைசூரு ஆதிசுஞ்சனகிரி பி.யு., கல்லுாரி மாணவர் ஊர்விஸ் பிரசாந்த், உடுப்பி வித்யோதயா பி.யு., கல்லுாரி மாணவி வைபவி ஆச்சார்யா, மைசூரு ஆர்.வி.பி.பி., பி.யு., கல்லுாரி மாணவி ஜானவி, மங்களூரு எக்சலேன்ட் பி.யு., கல்லுாரி மாணவர் குனசாகர் ஆகிய நான்கு பேர் 597 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும்; பெங்களூரு ஜெயநகர் ஆர்.வி., பி.யு., கல்லுாரி மாணவி பாதிமா இம்ரான், அபிஜெய், மல்லேஸ்வரம் எம்.இ.எஸ்., பி.யு., கல்லுாரி மாணவர் ஸ்ரீமான் நாராயண், பெலகாவி பனஜவாடா உறைவிட பி.யு., கல்லுாரி மாணவி கவுரி சஞ்சீவ் சூர்யவான்சி, சிக்கபல்லாப்பூர் எஸ்.பி.ஜி.என்.எஸ்., ரூரல் காம்போசிட் பி.யு., கல்லுாரி மாணவி ஹரிபிரியா ஆகிய ஐந்து பேர் 596 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us