பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் மாறுதல் செய்ய இன்று கடைசி

UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 11:17 AM

திருப்பூர்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் துவங்கவுள்ள நிலையில், தேர்வெழுதும் மாணவர்களின் பட்டியல் டிச., மூன்றாவது வாரம் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் விடுபட்ட மாணவர்களை சேர்க்கவும், இறப்பு, மாற்றுச்சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர்கள் பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இன்று (ஜன., 2) மாலைக்கு சரிசெய்து கொள்ளலாம்.
இறப்பு மற்றும் மாற்றுச்சான்றிதழ் பெற்ற மாணவர் பெயர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எந்தக்காரணம் கொண்டும் நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை தன்னிச்சையாக தலைமை ஆசிரியர்கள் நீக்கக்கூடாது.
மாவட்ட கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்னரே நீக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.