Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை; ஜூலை 1 முதல் அமல்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை; ஜூலை 1 முதல் அமல்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை; ஜூலை 1 முதல் அமல்


UPDATED : மே 17, 2026 12:05 PM

ADDED : மே 17, 2026 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 12:05 PM ADDED : மே 17, 2026 12:07 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஜூலை 1 முதல் 2026-27 கல்வியாண்டில் அனைத்து சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக 3 மொழிகளை கற்க வேண்டும். அவற்றில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு மொழியை கற்க விரும்புவோர் தாங்கள் கற்கும் மற்ற இரு மொழிகளும் தாய்மொழிகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதனை மூன்றாவது மொழியாகவோ அல்லது கூடுதலாக நான்காவது மெழியாகவோ கற்கலாம். 3வது மொழிக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது.

3வது மொழிக்கான தேர்வுகள், அதனை திருத்தும் பணிகள் அந்தந்த பள்ளிகளே திட்டமிட்டு நடத்திக் கொள்ளலாம். இது பற்றிய மேலும் விவரங்களை www.cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us