Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் முன்னாள் ஆசிரியர் கொடுத்த ஊக்கம் இது!: தொல்லியல் ஆய்வாளர் புகழாரம்

தினமலர் முன்னாள் ஆசிரியர் கொடுத்த ஊக்கம் இது!: தொல்லியல் ஆய்வாளர் புகழாரம்

தினமலர் முன்னாள் ஆசிரியர் கொடுத்த ஊக்கம் இது!: தொல்லியல் ஆய்வாளர் புகழாரம்

தினமலர் முன்னாள் ஆசிரியர் கொடுத்த ஊக்கம் இது!: தொல்லியல் ஆய்வாளர் புகழாரம்

UPDATED : ஆக 23, 2024 12:00 AMADDED : ஆக 23, 2024 08:58 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:
நாணயவியல் அறிஞரும், தினமலர் நாளிதழ் ஆசிரியராக இருந்த, மறைந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஊக்கப்படுத்தியதால் தான், பழங்கால நாணயங்களை அதிகளவில் சேகரித்து, தொடர்ந்து பள்ளி, கல்லுாரிகளில் கண்காட்சி நடத்தி வருகிறேன், என தொல்லியல் ஆய்வாளர் ஆர்.எஸ்.ஜவஹர் பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஜவஹர் பாபு சேகரித்துள்ள பழங்கால நாணயங்கள், போர் கருவிகள் உள்ளிட்ட பொருட்களின் கண்காட்சி, ராமநாதபுரம், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது; ஏராளமானோர் பார்வையிட்டனர்.

ஜவஹர் பாபு கூறியதாவது:


கண்காட்சியில் இந்திய நாணயங்கள், பல்லவர் கால நாணயங்கள், தங்கம், செம்பு, வெள்ளி, வெண்கல நாணயங்கள், ஆங்கிலேயர்களின் பிளாஸ்டிக் நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளேன்.

இச்சாதனைக்கு காரணம், நாணயவியலின் தந்தை என போற்றப்படும், தினமலர் நாளிதழ் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தான். அவரை ஒருமுறை சென்னை தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் சந்தித்து, என் கண்டுபிடிப்புகள் குறித்து பேசியபோது, அவற்றை பார்வையிட்டு பாராட்டினார்.

அப்போது பழங்கால நாணயங்கள், அவற்றின் சிறப்புகள் குறித்து, அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அன்று முதல், பழங்கால நாணயங்களை தேடித் தேடி சேகரித்து வருகிறேன். மாவட்டந்தோறும் பள்ளி, கல்லுாரிகளில் நாணயவியல் கண்காட்சி நடத்தி, மாணவர்களிடம் பழங்கால பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us