மூன்றாம் மொழி வேலை வாய்ப்புக்கு முக்கியம்

UPDATED : மார் 14, 2025 12:00 AM
ADDED : மார் 14, 2025 10:31 AM
ஊட்டி:
புதிய கல்வி கொள்கை வலியுறுத்தும், மூன்றாம் மொழி குறித்து மக்களிடையே பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், மலை மாவட்ட மக்கள் சிலரின் கருத்து:
சுதீஷ் குமார், முன்னாள் ராணுவ வீரர், அருவங்காடு:
அரசு பள்ளியில் தமிழ் பாடப்பிரிவில் படித்த போது, இந்தி இல்லாததால் ஒரு வார்த்தை கூட படிக்கவும், பேசவும் முடியவில்லை. ராணுவத்தில் சேர்ந்த போது அனைவரும் இந்தி பேசினாலும், பயிற்சியின் போதும், ஒன்றும் புரியாமல் சிரமப்பட்டேன். அங்கு சென்று இந்தி கற்று கொண்ட பிறகுதான் உற்சாகம் கிடைத்தது. தெலுங்கு, கன்னடா, பஞ்சாபி உட்பட 8 மொழிகள் பேசவும் வாய்ப்பாக கிடைத்தது. எனவே, ஆரம்ப கல்வி முதல் மூன்றாம் மொழியை விருப்ப பாடமாக மாணவர்கள் பயின்றால், நாடு முழுவதும் வேலை வாய்ப்பு தேடி செல்லவும், பேசுவதற்கும் வாய்ப்பாக அமையும்.
கணேஷ் ராமலிங்கம், சமூக ஆர்வலர், ஊட்டி:
மத்திய அரசின் மூன்றாம் மொழி கொள்கை என்பதை முதலில் அனைவரும் தெளிவாக படித்து அறிந்து கொள்ள வேண்டும். அதில், குறிப்பிட்ட மொழியை மாணவர்களிடம் திணிக்க எந்த விதிகளும் இல்லை. ஒவ்வொரு மாணவரும், அவருக்கு பிடித்தமான மொழியை தேர்வு செய்து படிக்கலாம். ஒருவர் எத்தனை மொழிகளை படித்தாலும், அவருக்கு பல வழிகளில் நன்மை தரும். உலகின் எந்த பகுதிகளுக்கு சென்றும் பணிபுரிய உதவியாக இருக்கும். இன்றைய போட்டி நிறைந்த உலகில், பன்மொழி புலமை ஒருவரிடம் இருந்தால், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன்; படைப்பாற்றல் மற்றும் தகவல் தொடர்பு திறன் அதிகரிக்கும்.
நிஷா, பள்ளி மாணவி, பந்தலுார்:
மொழியை கற்று கொள்வது அவரவர் விருப்பம். தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பது அனைத்து பள்ளிகளிலும் உள்ளது. அதை தவிர்த்து மூன்றாவதாக ஒரு மொழியை கற்று கொள்வது அவரவர் விருப்பம். குறிப்பாக, உயர் கல்வி படித்த பின்னர் வெளி மாநிலங்கள் மற்றும் மேலை நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும்போதும், மத்திய அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளின் போதும் மூன்றாவது மொழி தேவையாக உள்ளது. எனவே, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக இந்தியை கற்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.