யோசிக்கலாமே; பூங்காக்களில் கேரம், செஸ் விளையாட்டு மையங்கள்; மாணவர்கள் திறமையை மேம்படுத்த வழி காணலாமே

UPDATED : டிச 21, 2024 12:00 AM
ADDED : டிச 21, 2024 11:03 AM
மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிகள் கட்டுப்பாட்டில் ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இங்கு காலை,மாலை நேரங்களில் பூங்காக்களில் நடை பயிற்சி செய்வது,உடற்பயிற்சி செய்வது,குழந்தைகளுடன் விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மற்ற நேரங்களில் பூங்காக்கள் பூட்டி வைக்கப்படுகிறது. இதை பராமரிக்கவும் ஆட்கள் இருக்கின்றனர்.
பல பூங்காக்கள் பராமரிப்பில்லாமல் கவனிக்க ஆள் இல்லாமல் பூட்டியே இருக்கிறது. சில இடங்களில் அந்தந்த ஏரியாக்களில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
அதிலும் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் எல்லாமே சேதமடைந்து பயனில்லாமல் உள்ளது. இதனால் பலரும் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
தற்போது மாணவர்கள்,இளைஞர்கள் கேரம்,செஸ் போன்ற விளையாட்டுகளை ஆர்வமாக விளையாடுகின்றனர். சிலர் வறுமையை காரணம் காட்டி திறமை இருந்தும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாட,கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கேரம்,செஸ் போட்டியில் பல திறமைசாலிகளை உருவாக்குவதற்காக மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை சீரமைப்பு செய்து கேரம்,செஸ் விளையாட் டுகளை விளையாடுவதற்காக மையம் ஏற்படுத்த அதிகாரிகள் யோசிக்க வேண்டும்.
இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்துவதுதான் மாணவர்கள் நம் மாவட்டத்திற்கு பெருமையை தேடி தருவதற்கான வாய்ப்பு கிட்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.